search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர்கள் ஆர்ப்பாட்டம்"

    தாரமங்கலம் பகுதியில் முதலமைச்சரை வரவேற்க கொடி கட்டியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து உடலை வாங்க உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    கடந்த 20-ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று தாரமங்கலம் பகுதியில் வரவேற்பு பேனர் மற்றும் கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டது.

    அப்போது டைம் கார்னர் பகுதியில் காட்டப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜவேல் (வயது 27), மணிகண்டன் (23) ஆகிய 2 பேரும் வரவேற்பு பேனர்கள் கட்டிவிட்டு அதன் மீது கொடி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக கொடி கட்டியிருந்த கம்பி அந்த வழியாக செல்லும் மின் வயரில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டு உடல் கருகினர்.

    இவர்களை பொதுமக்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலன்இன்றி ராஜவேல் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.



    பின்னர் அவர்கள் ராஜவேல் உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மின்சாரம் தாக்கி காயம் அடைந்த ராஜவேல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரை பார்க்க சம்பந்தப்பட்ட கட்சியை சேர்ந்த யாரும் வரவில்லை. அவர்கள் வந்து பார்த்து உரிய சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் கூறியிருந்தால் அவர் பிழைத்திருப்பார்.

    அவருக்கு ரூ. 50 லட்சம் நஷ்டடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    போராட்டம் நடந்தும் உறவினர்களிடம் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×